யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் வேட்பாளராக தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில்… |

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவில் தமிழரசு கட்சிசார்பில் சொலமன் சிறிலை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தொிவித்துள்ளார்.

இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,

தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். 2023ம் ஆண்டுக்கான யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்

கடந்த மாதம் 28ஆம் திகதி 3வது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது தோற்கடிக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனல்ட் தனது முதல்வர் பதவியிழந்தார்.

இதனையடுத்து யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்  தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews