
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீண்டும் தனது பதவியை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாவட்டத்தில் நிலவும் மிக நெருக்கடியான நிலையினை கருத்திக் கொண்டு அவர் தனது பதவியை மீள பொறுப்பேற்கவுள்ளார்.
பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி மாதத்தின் ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர்,
மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார். எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் த.சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது. அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு அவர் இன்று காலை 8 மணிக்கு தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்கவுள்ளார்.