
நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக துரிதகதியில் இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்துவரும் அக்டோபர் மாத இறுதியில் தொற்று முற்றாக குறையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் சந்திம ஜீவசுந்தரன கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கொரோனா நிலவரம் தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்