
கடந்த முதலாம் திகதி அன்று பிற்பகல் முகமாலை பகுதியில் வீதியில் காணப்படும் பம்மிங்கால் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த பெண் யாழ் போதனா வைத்திய சாலை ஊழியர் என்றும் அவர் கொடிகாம் ஐயன் கோவிலடிை சேர்ந்த 46 வயதுடைய உதயகுமாரன் சுகந்தி எனும் இரண்டு பிள்ளைகளின் தாயாவர்
குறித்த பகுதியில் வீதியானது பொருமல் நிலையில் பம்மிங் போன்று காணப்படுகிறது. இதனால் தினம் தினம் குறித்த பம்மிங்கில் விபத்து இடம் பெற்றுவருவதாகவும், இதனை சீர் செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவ பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



