
யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் இந்த சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


