
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் இன்று வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி. வேணுகாராணி சுஜீப்குமார் கலந்துகொண்டார்.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர்களுக்கான கெளரவிப்பும் இதன்போது இடம்பெற்றது.


