
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்ம ராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், மகளிர் தின வைபவத்தின் சிறப்புரையை ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஆசிரியை அனீஸா பிர்தௌஸ் நிகழ்த்தினார்.
நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும்
வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலக கணக்காளர் சித்ரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர்
பத்மா ஜெயராஜ் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.