
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அவ்விருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்விற்பனையும் இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து
கொண்டார் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா உட்பட பிரதேச செயலக கணக்காளர் சமுர்த்தி முகாமையாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.