
சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது.
விருந்தினர்கள் மாவை அணிவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து அணிநடை, மாணவர்களின் போட்டிகள், இடைவேளை நிகழ்வு, பழைய மாணவர் நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் போன்றன இடம்பெற்றிருந்தன.
பாடசாலையின் அதிபர் திரு. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வலிகாமம் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மதியழகன், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. விஜயநாதன், கௌரவ விருந்தினராக ஆன்மீக அறக்கட்டளையின் செயற்பாடட்டாளர் திரு.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


