சதொச நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவினாலும், வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சிவப்பரிசி ஒரு கிலோகிராமின் விலை 9 ரூபாவினாலும், உள்ளூர் நாட்டரிசி 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 6 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.