மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்கடவை கிராமத்தில் வசிக்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவரான – இடுப்புக்கு கிழே செயலிழந்தவருக்கு 25,000 ரூபா நிதியும், பால்மா, சத்துமா பைக்கற்றுக்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன்
மடு பிரதேசத்தில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மேற்கு கிராமத்தில் வசிக்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கு மலசலகூடம் கட்டுமானத்திற்காக ரூபா 75,000 முதலாம் கட்ட நிதியாக வழங்கப்படுள்ளது.
இதே வேளை பண்டிவிரிச்சான் கிராமத்தில் வசிக்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவரான – இடுப்புக்கு கிழே செயல்இழந்தவருக்கும் 25,000 ரூபா நிதியும், சத்துமா பைக்கற்றுக்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு – மாங்குளம், பனிக்கன்குளம் கிராமத்தில் வசிக்கின்ற பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டுமான செலவுக்காக 2ம் கட்டமாக 75,000 ரூபா நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலய கட்டிட பணிக்காக 2ம் கட்டமாக 50,000 ரூபா நிதியும், வழங்கப்பட்டுள்ளன.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தமது தொண்டர்கள் சகிதம் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தார்.