அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூ,சிறிலை முதல்வராக தெரிவு செய்திருந்தால் யாழ் மாநகர சபையில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என
யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்தார்
யாழ் மாநகர சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
இங்கே ஒரு கட்சி இருக்கிறது என சொல்ல முடியாது ஒரு கட்சி என்று இல்லை ஓடிக் கொண்டிருக்கும்போது கட்சி மாறும் நிலைதான் காணப்படுகின்றது
தமிழரசு கட்சி எங்கே இருக்கின்றது தந்தை செல்வாவின் முகத்தை பாருங்கள் ஏன் தமிழரசு கட்சியை கொலை செய்கிறீர்கள் சைக்கிளோடி திரிந்த குமார் பொன்னம்பலம் எங்கே? நீங்கள் காரில் பிரச்சாரம் செய்கின்றீர்கள்
எங்கேயாவது மக்களுக்காக ஒற்றுமைப்பட்டு இருக்கின்றீர்களா அல்லது மக்களின் கஷ்டத்தில் குரல் கொடுத்திருக்கின்றீர்களா?
கொரோனா காலத்தில் 50 இறாத்தல் பாணை கொடுத்துவிட்டு படங்களை முகப்புத்தகத்தில் போட்டுவிட்டு நாங்கள் மக்களுக்கு உதவி செய்தோம் என ஓடிஒளித்தீர்கள் ஐந்து பரப்பு காணியுடன் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இன்று கோடிக்கணக்கான சொத்துடன் இருக்கின்றார்கள்
தமிழரசு கட்சி என்ற கட்சிக்குள் இரண்டுபிரிவு
தேசிய தலைவர் ஒரு கட்சி உருவாக்கினர் அதை நான்காக்கி இன்று 12 ஆக்கி வாய்ப்பாடு பெருக்குவது போல் கட்சிகளை உருவாக்கி இருக்கின்றார்கள்
அந்த காலத்தில் மாநகர சபை என்பது புனிதமானதாக காணப்பட்டது ஆலாலசுந்தரம் ஆனந்த சங்கரி ஆகியோரது காலத்தில் மாநகர சபைக்குமரியாதை ஒரு புனிதம் காணப்பட்டது
இப்போது கெட்ட வார்த்தைகள் கூட அழகாக அறுத்துறுத்து மாநகர சபையில் பேசப்படுகிறது
மாநகர சபையை பற்றி பேசி பிரயோசனமில்லை மக்கள் அதற்கு கட்டாயமாக பதிலடி கொடுப்பார்கள்
மாநகர சபை முதல்வர் பதவிக்கு மிகவும் அனுபவமானவர் மூத்தவர் முதல்வராக தெரிவு செய்யப்பட வேண்டியவர்சூ, சிறில் அவர்கள் ஆனால் அவரை விடுத்து வேறொருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்தார்கள்
எனவே மூத்தவர்களை அனுபவசாலிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை முதலில் இந்த பதவிகளுக்கு நியமியுங்கள்
குறிப்பாக மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிந்த பின்னர்தான் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக போட்டியிட முடியும் எனவே அவ்வாறான ஒழுங்கு முறையை பின்பற்றுங்கள்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூ,சிறிலை முதல்வராக தெரிவு செய்திருந்தால் இந்த மாநகர சபையில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது மாநகர சபை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது
ஆனால் எமது பேக்கரி உரிமையாளர் சங்கத்தில் கூட அவ்வாறு சம்பளம் வழங்கப்படுவதில்லை மக்களின் பணத்தை தான் நீங்கள் சம்பளமாக பெறுகின்றீர்கள் அத்தோடு நீங்கள் அரசியலுக்கு வரும்பொது ஏதாவது தியாகம் செய்து வருகின்றீர்களா இல்லை தானே. தற்போது அரசியல் என்பதை நையாண்டி மேளம் ஆக்கிவிட்டார்கள் தமிழரசு கட்சி தான் நையாண்டி மேளம் ஆக்கியது என்றார்,