மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் பெண்ணொருவர் பொங்கலிட சென்றவேளை அந்த ஆலய பிரதம குருக்கள் பொங்க விடாது தடுத்து திருப்பி அனுப்பியுள்ளார்!

10.3.2023 பி.ப காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வயிரவர் பொங்கல் நடைபெற்றது. அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பெண்ணொருவர் பொங்கலிட பொங்கல் பொருட்களுடன் சென்றவேளை அந்த ஆலய பிரதம குருக்கள் பொங்க விடாது தடுத்து பொங்கல் பொருட்களுடன் திருப்பி அனுப்பியுள்ளார். சமய பெரியவர்கள் அந்த கோவிலுக்கு நிதி வளங்குனர்கள் இப்படி பலர் உள்ளனர் ஆக குருக்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. அந்தக்குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கும் வேதனையோடு எங்களுக்கு சொன்னார்கள் உண்மையில் ஒரு நாகரீகமான செயற்ப்பாடல்ல கோவிலிலும் சாதி பார்ப்பவர்கள் எப்படி சைவத்தை வளர்க்கமுடியும் அப்படி தங்கள் கோவிலுக்கு மற்றவர்கள் வரக்கூடாது என பதிவுப்பலகை போட்டுவிடலாம் அப்படி போட்டால் மற்றவர்கள் வரமாட்டார்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் சைவம் வளரவேண்டும் என நினைக்கிற பெரியவர்கள் இப்படியான செயல்களை கண்டிக்க வேணும் வெளியரங்கமாக நீங்கள் கண்டித்தால்தான் இப்படியான வக்கிர புத்தியுள்ளவர்கள் திருந்துவார்கள் இல்லை காரைநகர் சாதீய வளத்தோடு என்றோ ஒருநாள் பாலை வனமாக மாறும் இப்போதே குடிக்க தண்ணீரில்லை நல்லாக வாழ்ந்த வீடுகள் மனிதர்களின்றி பேய்கள் வாழுது இது முன்னோர்கள் செய்த பாவத்தின் சம்பளம் மனிதர்களாக வாழ முயர்ச்சி செய்வோம் இனியும் திருந்தாவிட்டால் கடவுள் தான் காரைநகரை காப்பாற்ற வேண்டும் அவர்கள் அந்த பொங்கலை பக்கத்தில் இருந்த மரத்துக்கு படையலிட்டு வணங்கினார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews