அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் மருத்துவமனைகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேபோல் கிழக்கு மேல், தென், மத்திய மாகாணங்களின் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர்.
அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் என முடிவு எட்டப்பட்டுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.