
உயிரிழந்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது படி ரக வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்து குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகன் என்பவர் ஆவார்.
தனது உறவுக்காரரின் மரண வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்றபோதே விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது படி ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது