
தொலைபேசியில் பேசிக் கொண்டு வீதியின் குறுக்கே பாதசாரி கடவையில் சென்ற விசேட தேவையுடைய ஒருவரின் காதை வெட்டி துண்டாக்கிய இளைஞர் ஒருவர் அவரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். பாதசாரி கடவையில் சென்று கொண்டிருந்தபோது அவரது கைப்பேசிக்கு அழைப்பொன்று வர,
கைப்பேசியில் பேசிக்கொண்டே நடந்துள்ளார். அவர் கைப்பேசியில் பேசிக்கொண்டு வீதியை கடப்பதை பார்த்த இளைஞரொருவர் கோபமடைந்த நிலையில் தான் வைத்திருந்த கத்தியினால் குறித்த நபரின் காதை துண்டித்ததோடு,
அவரை கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். காது துண்டிக்கப்பட்டு, தாக்குதலுக்குள்ளான நபர் ‘விசேட தேவையுடையவர்’ என தெரிவித்த பொலிஸார் தப்பிச் சென்ற இளைஞரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.