புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் யாழ்.மாவட்டத்தில் நடைபவனி ஒன்று நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ்.பரியோவான் கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
ஊடக சந்திப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.பரியோவான் கல்லூரி அதிபர் துசிதரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன்,
புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறீதரன்,பெண்களுக்கான புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் தனுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடைபவனியானது பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பித்து யாழ்.போதனா வைத்திய சாலை வீதி ஊடாக செல்லவுள்ளது.