
லயன்ஸ் கழக பிராந்திய மற்றும் வலய தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் கூட்டத்தினை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக பிராந்திய தலைவர் p.ஐங்கரன் மற்றும் வலைய தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் ஆகியோர் வடமராட்சி கிழக்கு லயன்ஸ் கழகத்தினரால் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பகுதியில் கண்பார்வை குன்றியவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகளும் வழங்ககப்பட்டது.
நிகழ்வில் இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மற்றும் கண்பார்வை குன்றிய கண்ணாடி பெற்றுக்கொள்ள வேண்டியவர்களும் கலந்து கொண்டனர்.












