
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் நேற்றைய தினம் கண்ணிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கண்ணிவெடியானது தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணி ஒன்றில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்துள்ளது.
இதேவேளை பலாலி அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிசார் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், நீதிமன்றத்தின் நடவடிக்கையின் பின்னர் அந்த வெடிபொருட்களை மீட்டு செயலிழக்க செய்யவுள்ளனர்.
