
தையல் மற்றும் அழகுக்கலை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி இன்றையதினம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களது உற்பத்தி பொருட் கண்காட்சியே இவ்வாறு நடைபெற்றது.
இதன்போது கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தையல் போதனாசிரியர் ந.வேல்வரராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.











