
யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி நேற்றையதினம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 68 சோடி மாட்டுவண்டிகள் பங்குபற்றின.
இதில் ஏ,பி,சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் சங்குவேலியைச் சேர்ந்த கேமச்சந்திரன் என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன. டி பிரிவில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆஞ்சலோ என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன. அதுபோல ஈ பிரிவில் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிருபா என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன.
வட்டுக்கோட்டை இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியை கண்டுகளிக்க பலநூற்றுக்கணக்கான இரசிகர்கள் வருகை தந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.






