
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெறறது.
இன்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு, இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ். பரியோவான் கல்லூரியுடன் இணைந்து இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.
நடைபவனியானது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை வந்தடைந்து மீண்டும் பரியோவான் கல்லூரியை சென்றடைந்தது
இதில் கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் வைத்தியசாலை சமூகம் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







