யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு பட்டிமன்ற நடுவராக பிரதம விருந்தினராக தென்னிந்திய பிரபல பட்டிமன்றபேச்சாளர் திருமதி கவிதாஜவகர் கலந்துகொண்டு நடுமைபேச்சாளராக உரையாற்றினார்.
இந்த பட்டிமன்றத்தில் பிரதான தலைப்பாக கொண்டு விளங்குவதாக இளம்சமுதாயகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு,அல்லது சமூகத்திற்கே என்ற தலைப்பில் பிரதிவாதமான கருத்துக்கள் வழங்கப்பட்டது.
இவ் பட்டிமன்றத்தில் இத்தலைப்பு பிரதிவாதிகளாக பெற்றோர் என்ற பிரதிநிதிகளாக கோப்பாய் ஆசிரியர் கலாசலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி மதன் கோசலை, மற்றும் எதிர்வாதிகளாக சமூகமே என்ற அணியில் தனியார் நாளிதழ் பத்திரிகை ஆசிரியரும் பாடசாலை அதிபரும் ஆகிய ந.வியசுந்தரம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக துணைசார்ந்த விரிவுரையாளர் செல்வி கு.தயாளினி கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை வழங்கினர்.
இவ் நிகழ்வில் கண்டு மகிழ சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், தமிழரசு கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் , மேலதிக அரசாங்க ம.பிரதீபன் மற்றும் வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம் மற்றும் மதத்தலைவர்கள், சான்றோர், பார்வையாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.