
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் பார்வையிடும் முகமாகவும் தற்காலிக வீட்டு திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கும் றகாம நிறுவனம் மற்றும் நேர்வேயை தளமாக கொண்டு இயங்கும் போருட் நிறுவனம் இணைந்து நேற்றையதினம் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்தும் முகமாகவும் மீள் குடியேற்ற மக்களின் வாழ்வதாரம் மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முகமாகவும் பிரதேச செயலகத்துடன் இணைந்து அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்கான மேற்பார்வை விஜயமாக குறித்த விஜயம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
குறித்த விஜயத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிவசிறி, றகமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார், நேர்வே போரூட் அமைப்பின் திட்ட அமைப்பாளர் அனா ,பலாலி கிரமசேவகர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.