மட்டக்களப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தபால்திணைக்களம் ஆசிரியர் சங்கங்கள் வங்கி ஊழியர்கள் இன்று புதன்கிழமை (15) ஒருநாள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலை மற்றும் அஞ்சல் நிலையங்கள் முற்றாக ஸ்தம்பிம் அடைந்துள்ளதுடன் ஆசிர்யர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் 8 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்தனர் இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலைகள் திறந்திருந்த போதும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தாரததையடுத்து பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தது
அதேவேளை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பையடுத்து வெளிநோயாளர் பிரிவு முற்றிலும் ஸ்தம்பிதமடைந்ததுடன் சத்திரசிகிச்சை மற்றும் ஏனைய பிரிவு இயங்கியதுவருகின்றது
மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்கள் யாவும் மூடப்பட்டு செயலிழந்ததுடன் தனியர் வங்கிகளை தவிர ஏனைய வங்கி நடவடிக்கைகளும் செயலிழ்ந்ததுடன் காந்தி பூங்காவின் முன்னால் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.