
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லிட்டர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.
இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன.
வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.