
பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என தாயார் கண்னீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் தற்போது காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கணவரை இழந்த குறித்த பெண்ணுக்கு மகன் ஒருவர் மட்டுமே அவர் வாழ்வின் ஆதாரமாக இருந்துள்ளார்.
குறித்த தாயார் இந்தியாவில் தனித்து வசித்து வரும் நிலையில் மகன் பிரான்ஸிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காணாமல்போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.