
பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சமூகப் பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சீமேந்து தொழிற்சாலை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதேநேரம் கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் காணப்படும் பொருத்தமான நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை நடத்தியுள்ளார்.


