
கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று 16/03/2023 வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
தற்போது வைத்தியசாலையில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 500,798.00 பெறுமதியான மருந்து வகைகள் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடம் சென்று வழங்கி வைத்தார்.












இதே வேளை வடமராட்சி கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட கரணவாய் தாமோதர வித்தியாலயத்திற்கு ரூபா 280000/- பெறுமதியில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு நேறறைய தினம் பாடசாலை சமூகத்ததம் ஆச்சிரமத்தால் கையளிககப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆச்சிரம தொண்டர்க்களும் கலந்து கொண்டனர்.