
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
கடையின் உரிமையாளர் இன்று காலை வழமை போல விற்பனை நடவடிக்கைக்காக கடையை திறக்க முற்பட்டவேளை கடையானது பகுதி எரிந்து சேதமாகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




