
யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் இன்றையதினம்(17) மாலை திறந்துவைக்கப்பட்டது.
ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையை சொஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள்,ரில்கோ சிற்றி ஹொட்டல் ஊழியர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



