
க.பொ.த உயர்தர மாணவர்களின் பொது தகவல் தொழில் நுட்ப பரீட்சை யாழ். இன்று காலை ஆரம்பமானது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 60 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெறுகிறது.
2019, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பரீட்சை இடம்பெறாத நிலையில் இவ்வருடம் குறித்த பரீட்சை இடம்பெறுகிறது.
வட மாகாணத்தில் 228 நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு 32,052 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். எனினும் 2022 மற்றும் 2021 வருட உயர்தர மாணவர்கள் தவிர ஏனைய வருட மாணவர்கள் குறைந்த அளவிலேயே தோற்றினர். பரீட்சை கடமைகளுக்கு போதிய அலுவலர்கள் சமூகமளித்திருந்தனர்.
யாழ்ப்பாண கல்லூரி பரீட்சை நிலையம் வட்டு இந்துக் கல்லூரி பரீட்சை நிலையம்








