
கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் விவேகாநந்தாநகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி பெண்கள் சம்மேளன அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழவ்ில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், மாவட்டத்தில் உள்ள பல்துறைகளில் விளங்கும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறு தொழில் முயற்சியாளர்களாக விளங்கும் பெண்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் சந்தையும் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் இங் கு குறிப்பிடத்தக்கது.







