
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சிறுமியான குறித்த தங்கை கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்,
எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.