உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய 25 ம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளுராட்சி சபைகளின் காலம் முடிவடைவதால் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிலை எவ்வாறானதாகயிருந்தாலும் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு அப்பால் தேர்தல்களை பிற்போடுவது உகந்த விடயமல்ல எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் கீழ் நீண்டகாலத்திற்கு உள்ளுராட்சி சபைகளை வைத்திருப்பது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களிற்குள் தேர்தல் இடம்பெறும் என நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய 25 ம் திகதி தேர்தலை நடத்தினால் அது சிறந்தது ஆனால் அது கடினம் என்பது போல தற்போது தோன்றுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பிற்காக அரசாங்க அச்சக திணைக்களத்திலிருந்து வாக்குசீட்டுகள் கூட தற்போது கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.