அச்சுவேலிப் பொலிஸ் நிலைத்துக்கு உற்பட்ட பகுதியில் பாலியல் நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அச்சு வேலிப் பொலிசார் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக அச்சுவேலி தென்மூலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பாலியல் நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
சிறுமி காணாமல் போனமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த சிறுமி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட சிறுமியை அச்சுவேலிப் பொலிசார் பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் மருத்துவமனையில் அனுமதிக்காது தாயாருடன் மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
குறித்த சிறுமி நேற்று முன்தினம் இரவு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை அந்த ஒரு அரச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்படாத நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
இன் நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஒரு மணி அளவில் குறித்த சிறுமியை அச்சுவேலிப் பொலிசார் யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை உரிய நேரத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்காத அச்சு வேலிப் பொலிசாரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலதிக கவனம் செலுத்தி வருகிறது.