கல்மடு விவசாயிகளிற்கு இரணைமடு குளத்தின் கீழ் 500 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் இரணைமடு விவசாய சம்மேளன மண்டபத்தில் இன்று இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரணைமடு குளத்தில் 82 ஆயிரம் ஏக்கர் அடி நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்ள உள்ளோம்.
அந்த வகையில், 60 ஏக்கர் மறு பயிர்ச்செய்கைக்கும், 500 ஏக்கர் கல்மடு விவசாயிகளிற்கு வழங்கவுள்ளோம். ஏனெனில், கல்மடு குளம் அபிவிருத்திக்காக திறந்துவிடப்பட்டுள்ளமையால் அங்கு சிவபோகம் செய்ய முடியாதுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கு இவ்வாறு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.