
யாழ் மாநகர சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகர சபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது நேற்று திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று மாநகர ஆணையாளர் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்கு சென்று கடமைக்கு திரும்பவில்லை.

குறித்த உத்தியோத்தர் வருவாரா என சேவை பெறச் சென்றவர் சக உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் வருவார் என பதில் அளிக்கப்பட்டது.
எனினும் மாலை 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்காகச் சென்ற உத்தியோத்தர் வராத நிலையில் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் பதில் வழங்கப்படும் என சக உத்தியோதரால் சேவை பெறச் சென்றவரிடம் தொலைபேசி இலக்கம் வாங்கப்பட்டது.
மாநகர உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் மாநகர சபையில் கடமையாற்றும் சிலர் மேல் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆகவே தமது தேவை கருதி மாநகர சபைக்கு செல்லும் மக்களுக்கு உரிய நேரத்தில் அதிகாரிகள் கடமையில் இருப்பது அவர்களின் தேவையை இலகுபடுத்துவதாக அமையும்.