
159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. 1864.03.21 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இன்று பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு திணைக்கள கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
தொடர்ந்து, உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவுகூறப்பட்டது.







