
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.