
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளிற்கான. தொழிற்பயிற்சி, உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான மாவட்ட தொழிற்சந்தை இன்று இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் திறண்கள் அபிவிருத்திப்பிரிவு மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், திணைக்கள அதிகாரிகள், தொழில் வழங்கும் நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற தொழில் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தொழில் தேடும் இளைஞர் யுவதிகளிற்கான ஆலோசனை வழிகாட்டல்களும், விற்பனை சந்தையும் , கண்காட்சியும் இடம்பெற்றது.







