யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தினல் பசும்பால் வழங்கும் செயற்றிட்டம் இன்று யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய அதிபர் க.தவசீலன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.
யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்க சமாசத்தினால் மாவட்தில் 12 பிராந்தியங்களாக வகைப்படுத்தப்பட்டு பசும்பால் தேவையுடைய மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இலவசமாக பசும்பால் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர் பருவத்தில் அவர்களின் ஊட்டச்சத்து மந்த நிலையினை போக்கி ஆரோக்கியமான இளஞ்சமுதாயத்தினை உருவாக்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
இன்றைய நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தின் நல்லூர் பிராந்திய சபைத்தலைவர் சு.சிவலிங்கம் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செ.சாதனா, நல்லூர் பிராந்திய வெளிக்கள உத்தியோகத்தர் ந.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.