
யாழ்.ஏழாலை சிவகுரு வீதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் தகவல் தருகையில், குறித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாகவும் இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குள் நுழைந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியபோதே குறித்த நபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றனர். தப்பி ஓடும்போது மதிலை பாய்ந்தபோது அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம். எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.