உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
வாக்குச்சீட்டு கிடைக்கப்பெறாமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள தடை என்பன குறித்து இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட வகையில் நடத்த முடியுமா என்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.