யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரியின் நிர்வாகத்தால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் கல்லூரி நிர்வாகத்தால் துவிச்சக்கர வண்டிப் பவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பவனியானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி உடுவில் மகளிர் கல்லூரி நோக்கி சென்றது. பின்னர் அங்கிருந்து மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையை வநதடைந்து அங்கு மரக்கன்று நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட குறித்த பவனியானது சங்கானை ஊடாக சித்தங்கேணியை வந்தடைந்து, இறுதியாக யாழ்ப்பாணக் கல்லூரியை வந்தடைந்தது.
இந்த பேரணியானது கல்லூரியின் அதிபர் ருசிரா குலசிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.