அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டு மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.
மங்கல விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினரான மருதங்கேணி கோட்ட கல்வி பணிப்பாளர். சிறி இராமச்சந்திரன், சிறப்பு விருந்தினரான அம்பன் கிராம அலுவலர் திருமதி துவாரகா, உட்பட பலரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தேசிய கொடியினை மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறி இராம சந்திரன் ஏற்றியதை தொடர்ந்நு மாகாண கொடி, பாடசாலை கொடி, இல்லக் கொடிகள் எற்றப்பட்டன். அதனை தொடர்ந்து மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
விளையாட்டுப் போட்டியை சம்பிர்தாய பூர்வமாக பிரதம விருந்தினர் தொடக்கி வைத்தார்.
கம்பன், பாரதி, வள்ளுவன் ஆகிய இல்லங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் வள்ளுவன் இல்லம் முதலாம் இடத்தையும், பாரதி இல்லம் இரண்டாம் இடத்தினையும், கம்பன் இல்லமும் பெற்றுக் கொண்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்களை பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.
இப் போட்டியில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அயல் பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்தக சிறப்பித்தனர்.