மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் வீதி கடவையை தடைசெய் தமையை கண்டித்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலை மறித்து நேற்று சனிக்கிழமை (25) பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக சுமார் 3 மணி நேர தாமத்தின் பின்னர் ரயில் செல்ல அனுமதித்தனர்.
கடந்த 2004 சுனாமியால் மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தைச் சோந்த பாதிக்கப்பட்ட மக்களை திராய்மடு என்றழைக்கப்படும் சுவிஸ்கிராமத்தில் குடியேற்றினர். இந்த கிராமத்தில் இருந்து மட்டக்களப்புக் ஊறணி சந்திக்குச் செல்லும் வீதியில் குறுக்கே உள்ள ரயில் தண்டவாள கடவையை கடந்து மக்கள் பிரயாணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சுவிஸ்கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை ரயில் கடவையினை கடக்கும் வீதி பகுதியினை ரயில் நிலைய ஊழியர்கள் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதியை தடை செய்தனர் இதனையடுத்து இந்த வீதிதடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபிரதேச மக்கள் ஒன்றினைந்து ரயில் கடவையை மறித்து நேற்று காலை 6 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த ரயிலை அந்த பகுதியில் மறித்து தடுத்து நிறுத்தி தண்டவாளத்தில் படுத்துக்கிடந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ரயில் தண்டவாளத்திற்கு எதிராக அமைந்துள்ள பாடசாலை வைத்தியசாலை மற்றும் நகருக்கு செல்வதாயின் சுமார் 4 கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே வீதியை மீண்டும் பயன்பாட்டுக்கு ஏற்றமுறையில் தராவிட்டால் தாங்கள் இப்பகுதியிலிருந்து செல்வதில்லை எனவும் ரயிலையும் செல்லவிடமாட்டோம் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அங்கு கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரயில் நிலைய அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு வீதியை மீண்டும் புனரமைத்து தடை அகற்றப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டு வீதியை ரயல்வே ஊழியர்கள் புனரமைத்ததையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் சுமார் 3 மணிநேரத்தின் பின்னர் ரயிலை பிரயாணிக் இடமளித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.