கொழும்பில் இன்று (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு அப்பால் வேறு எந்த சட்டத்தின் விதிமுறைகளை திருத்தும் மற்றும் கையில் எடுக்கும் அதிகாரம் மற்றும் கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டில் அரசியலயமைப்பு உள்ளது. அரசியலமைப்புக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல சட்டங்கள் உள்ளன. அவையே நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
இந்த சகலவிதமான சட்டங்களையும் தேவை எனில் நீக்கவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நடைமுறைப்படுத்துவதை இல்லாமல் செய்வதற்குமான அதிகாரத்தை ஜனாதிபதி தனது கைகளில் எடுத்துள்ளார்.
அதுமட்டுமன்றி புதிததாக தேவைப்படும்பட்சத்தில் விதிமுறைகளை ஏற்படுத்தி சட்டத்தை உருவாக்கவும் அதிகாரம் உள்ளது.
நாடாளுமன்றத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட அனைத்து சட்டங்களையும் இல்லாமல் செய்து புதிய சட்டவிதிமுறைகளை கொண்டுவரும் அதிகாரத்தை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
எந்த ஒரு பிரஜையையும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கைதுசெய்வதற்கான கட்டளையைப் பிறப்பிக்க முடியும்.
அதேபோன்று யாரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது நீண்டகாலத்துக்கு தடுத்து வைப்பதற்கான கட்டளையைப் பிறப்பிப்பதற்கான அதிகாரமும் உள்ளது.
காணி உள்ளிட்ட சகல இடங்களையும் கையகப்படுத்துவதற்கான கட்டளையைப் பிறப்பிக்கவும் அதிகாரம் உள்ளது.
ஜனாதிபதியிடம் உள்ள நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரம், சட்டத்தை உருவாக்கியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தலாமா என்று பரிசீலனை செய்வதற்கான நீதிமன்றத்தின் அதிகாரம் ஆகிய அதிகாரங்கள் முழுமையாக ஜனாதிபதியின் கீழ் உள்ளது.
எனினும் இது தொடர்பாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினாலும் சில மக்களும் தவாறாகவே புரிந்துகொண்டுள்ளனர்.
பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றமை, பொருட்களை பதுக்கி வைக்கின்றமை போன்ற காரணங்களில் நுகர்வோர் பாதிப்புற்றுள்ளனர் எனவே இதனைத் தடுப்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதன் பின்னணியில் பாரிய ஒரு விடயம் காணப்படுகிறது.