
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமது விற்பனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்பொருள் வாணிப உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் பொருட்களை வாங்குவதில் சிரமப்படுகின்றனர்.
மூன்றுவேளை நிம்மதியாக உண்டு , உறங்கிய மக்கள் தற்போது ஒரு நேரம் அல்லது இரு நேரம் என் தங்களது உணவு வேளைகளை குறைத்துள்ளளனர்.
தற்போது மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. ஆகையால் குளிர்சாதனப் பெட்டிகளை பாவிப்பதை குறைக்க வேண்டி அல்லது பாவிப்பதை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்ததை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் காணப்படுகிறது.
எனவே அரசாங்கம் தேவைறில்லாத விடயங்களுக்கு அடிபடாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் எது நல்லது அதை செய்வதற்கு முன்வர வேண்டும் – என்றனர்.





