
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இணைந்த கரங்கள் அமைப்பினால் 9. பாடசாலையை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 202 பாடசாலை மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதில் தரம் 5க்கு உட்பட்ட மாணவர்கள் 86 மாணவர்களுக்கான புத்தக பைகளை அவுஸ்ரேலியாவில் வாழ் நவரத்தினம் ரூபரமேஸ் . சிறிகணேஸ் செலெக்சன் உரிமையாளர் .குகேந்திரன் மாரிமுத்து.ரூபன் தருமலிங்கம் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
ஏனைய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளை இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்போடும் வழங்கிவைக்கப்பட்டது .
சமூக செயற்ப்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவருமான இ.முரளிதரனத தலைமையில் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி செல்லத்துரை சிறிராமச்சந்திரன், உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் சி.ஜெந்திரன். மருதங்கேணி இ.த.க.பாடசாலை அதிபர் ரங்கநாதன். ஆழியவளை சி.சி.த.க. பாடசாலை அதிபரின் பிரதி நிதியாக வந்த ஆசிரியை க.சந்திரகலா. வெற்றிலைக்கேணி பரமேஸ்வர வித்தியாலயத்தின் அதிபரின் பிரதிநிதியாக வருகைதந்த ஆசிரியை ப.சரிதா. கேவில் அ த க. பாடசாலை அதிபர் பிரதி நிதியாக வருகை தந்த. ஆசிரியை சி.சுகந்தி இணையும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான கிழக்கு மாகாணம் அம்பாறை காரைதீவிலிருந்து வருகை தந்த கஜரூபன் .சிறிகாந்தன் .டிலைக்ஷன் சிருஸ்ந்தன் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு தலைவரும் மன்னார் விடத்தல்தீவு ஆயுள்வேத வைத்தியசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான குறிஞ்சிக்குமரன், பிரஜைகள் குழு உப தலைவரும் மகளிர் பிரிவு தலைவியிமான சற்குணதேவி ஆகியோர் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பி மற்றும் புத்தக பை என்பவற்றை வழங்கி வைத்தனர்.
இதில் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.











